Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 09 அக்டோபர் 2026 | 23 புரட்டாசி பராபவ வருடம்

அமெரிக்காவில் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 15% சரிவு

அமெரிக்காவில் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 15% சரிவு

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர்.அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கடந்த கல்வியாண்டில் மட்டும் 3.63 லட்சம் இந்திய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, கல்வி நிறைவடைந்த பிறகு கூடுதலாக 2 ஆண்டுகள் வரை மாணவர் விசா கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மாணவர் விசாவை ஹெச்.1.பி. விசாவாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் இருந்தது.இந்நிலையில், படிப்பு முடிந்த பிறகும் அமெரிக்காவில் கூடுதல் காலம் தங்குவதற்கான இந்தச் சலுகைக்கு இனி 1 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் தாக்கமாக, நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Advertisement
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 15 சதவீதம் சரிந்துள்ளது.அமெரிக்கா மேற்கொண்டுள்ள விசா நடைமுறை மாற்றமே இந்திய மாணவர்களின் விண்ணப்ப எண்ணிக்கை குறைந்ததற்கான முக்கிய காரணமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு