Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

அக். 1 முதல் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு ரூ.5,000 வரை பராமரிப்பு தொகை!

அக். 1 முதல் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு ரூ.5,000 வரை பராமரிப்பு தொகை!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல், கடை அமைந்துள்ள பகுதியின் அடிப்படையில் மாதந்தோறும் பராமரிப்பு தொகை வழங்கப்பட உள்ளது. இதன்படி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள மதுக்கடைகளுக்கு மாதம் ரூ.5,000, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் கடைகளுக்கு ரூ.4,000, ஊரகப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ரூ.3,000 என பராமரிப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
மதுக்கடைகளை தினமும் சுத்தம் செய்வது, துப்புரவு பணியாளரை நியமிப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கு மட்டுமே இந்த தொகையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மின்சார கட்டணம் செலுத்துதல், கட்டிடங்களை பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ பராமரிப்பு தொகையை பயன்படுத்தக் கூடாது என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதத்துக்கான பராமரிப்பு தொகை, செப்டம்பர் மாத சம்பளத்துடன் டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு