Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 05 செப்டம்பர் 2026 | 20 ஆவணி பராபவ வருடம்

9 நாட்களாக ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரம் உச்சரித்தேன்:

9 நாட்களாக ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரம் உச்சரித்தேன்:

கிருஷ்ண ஜெயந்தியில் நேபாள சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளி நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரிடரின்போது சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 9 நாட்களும் ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்ததாக உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளி சஞ்சய்ஷா தெரிவித்துள்ளார்.இமயமலைப் பகுதியில் நேபாளம்-திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் கடந்த மாதம் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து, போடேகோஷி நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தின் பல பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்துடன் அடித்து வரப்பட்ட சேறும் சகதியும் பல்வேறு உள்கட்டமைப்புகளை கடுமையாக சேதப்படுத்தின.இந்த பேரிடரில் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300-ஐ கடந்துள்ளது. மேலும் 5,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமான இந்தியர்களும் உள்ளனர்.காணாமல் போனவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைந்து வந்த நிலையில், நேற்று திரிசூலி 3 ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் இருந்து மனிதர்களின் குரல் கேட்பதை மீட்புப் படையினர் கவனித்தனர். இதையடுத்து சுரங்கத்துக்குள் சிக்கியிருந்தவர்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. நேபாள ராணுவம் மற்றும் ஆயுத போலீஸ் படையினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர்.இதன் மூலம் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த 2 பேர் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டது நம்பிக்கையை ஏற்படுத்தியது.மீட்கப்பட்டவர்களில் 45 வயதான கபிர் மகார்ஜன், நீர்மின் திட்டத்தில் மெக்கானிக்கல் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர்.

Advertisement
மற்றொருவரான 30 வயது சஞ்சய் ஷா மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். கபிர் மகார்ஜன் காத்மாண்டுவில் உள்ள நேபாள ராணுவ மருத்துவமனையிலும், சஞ்சய் ஷா நுவகோட்டில் உள்ள திரிசூலி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாதேஷ் மாகாணத்தின் சப்தாரி மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் ஷா, மீட்கப்பட்ட பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.அவர் கூறியதாவது: “வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நான் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்தேன். அங்கு இருந்த ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாப்பது எனது பொறுப்பு. சம்பவம் தொடங்கியவுடன் அங்கிருந்த அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தினேன். அவர்கள் தப்பிச் சென்றனர். ஆனால் நான் மட்டும் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டேன்.சுரங்கத்தில் சிக்கியிருந்த 9 நாட்களும் ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருந்தேன். அங்கு மேலும் 3 அல்லது 4 பேர் சிக்கியிருந்தனர். அவர்களுடன் சத்தம் எழுப்பியும் பேசியும் தொடர்பில் இருந்தோம்.பவர்ஹவுஸைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலர் சிக்கியிருக்கலாம். அவர்கள் உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பு இல்லை. வெள்ளத்தின் கடுமையான அழுத்தத்தால் அவர்கள் சுரங்கத்தின் உள்ளே தள்ளப்பட்டிருக்கலாம்” என்றார். 9 நாட்கள் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சஞ்சய் ஷா, பகவான் கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நாளில் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு