ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா மற்றும் கனடா பயணத்தின்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.அந்தப் பயணத்தை நிறைவு செய்துள்ள மோகன் பகவத் தற்போது இங்கிலாந்து சென்றுள்ளார்.
Advertisement
லண்டனில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் மற்றும் குருத்துவாரா ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு அவர் சென்று வழிபாடு மேற்கொண்டார்.மோகன் பகவத் நாளை மறுதினம் வரை இங்கிலாந்தில் தங்கியிருப்பார் என்றும், அதன் பின்னர் இந்தியா திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.