Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 05 செப்டம்பர் 2026 | 20 ஆவணி பராபவ வருடம்

கோவை: ஆடிட்டர் வீட்டில் 75 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு

கோவை: ஆடிட்டர் வீட்டில் 75 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு

கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில் ஓய்வு பெற்ற ஆடிட்டர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், சுமார் 75 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.ஒப்பணக்காரவீதி பகுதியில் சேஷகிரி (70) என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், பெங்களூருவில் வசிக்கும் தனது மகனை சந்திப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்றார். அங்கு ஒரு மாதம் தங்கியிருந்த அவர், நேற்று காலை கோவையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Advertisement
உடனடியாக வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது,பீரோவும்உடைக்கப்பட்டிருந்ததுதெரியவந்தது.பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 75 கிலோ வெள்ளி பூஜைப் பொருட்கள், வெள்ளித் தட்டுகள், வெள்ளிக் குத்துவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.இதுகுறித்து சேஷகிரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் புகுந்து வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருடுபோன வெள்ளிப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு