85 அடியை நெருங்கிய மேட்டூர் அணை
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து சுமார் 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ள நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக நீடித்து வருகிறது.இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, நேற்று முன்தினம் வினாடிக்கு 12,106 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று 10,692 கனஅடியாக குறைந்தது. அதேநேரத்தில், அணையின் நீர்மட்டம் 83.52 அடியில் இருந்து 84.50 அடியாக உயர்ந்தது.இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 10,579 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர்மட்டம் 84.95 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் தற்போது 47.067 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 85 அடியை நெருங்கியுள்ளது.