Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 01 செப்டம்பர் 2026 | 16 ஆவணி பராபவ வருடம்

7.8 சதவீதம் ஜி.டி.பி. வளர்ச்சி மோடியின் தலைமைக்கு சாட்சி; அமித்ஷா புகழாரம்

7.8 சதவீதம் ஜி.டி.பி. வளர்ச்சி மோடியின் தலைமைக்கு சாட்சி; அமித்ஷா புகழாரம்

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த வளர்ச்சி பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் வெளிப்பாடு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். உலகளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற சூழலையும் இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவீத ஜி.டி.பி.

Advertisement
வளர்ச்சி ஏற்பட்டிருப்பது, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைக்கு வலுவான சான்று என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.சர்வதேச அளவில் கடுமையான பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்ட நிலையிலும், அவற்றில் இருந்து இந்தியா உறுதியுடன் மீண்டு வருவதற்கு பிரதமர் மோடியின் தலைமை முக்கிய காரணமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்காக நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு