7.8 சதவீதம் ஜி.டி.பி. வளர்ச்சி மோடியின் தலைமைக்கு சாட்சி; அமித்ஷா புகழாரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

7.8 சதவீதம் ஜி.டி.பி. வளர்ச்சி மோடியின் தலைமைக்கு சாட்சி; அமித்ஷா புகழாரம்

7.8 சதவீதம் ஜி.டி.பி. வளர்ச்சி மோடியின் தலைமைக்கு சாட்சி; அமித்ஷா புகழாரம்

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த வளர்ச்சி பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் வெளிப்பாடு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். உலகளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற சூழலையும் இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவீத ஜி.டி.பி. வளர்ச்சி ஏற்பட்டிருப்பது, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைக்கு வலுவான சான்று என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.சர்வதேச அளவில் கடுமையான பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்ட நிலையிலும், அவற்றில் இருந்து இந்தியா உறுதியுடன் மீண்டு வருவதற்கு பிரதமர் மோடியின் தலைமை முக்கிய காரணமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்காக நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை அமித்ஷா தெரிவித்துள்ளார்.