Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

74 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிப்பு; 52 பேர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் கவனம்

74 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிப்பு; 52 பேர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் கவனம்
1952-ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி 52 பேரின் உயிரைப் பறித்த பயணிகள் விமானத்தின் முக்கிய பாகங்கள், 74 ஆண்டுகளுக்குப் பிறகு கடலின் ஆழத்தில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன.இன்றைய விமானப் பயணங்களில் அவசரகால பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பயணிகளுக்கு விமானப் பணியாளர்கள் வழங்கும் விளக்கங்களுக்கு அடிப்படையாக அமைந்த முக்கிய சம்பவங்களில் ஒன்றாக இந்த விமான விபத்து கருதப்படுகிறது. அந்த விபத்தில் கடலில் மூழ்கிய விமானத்தின் இறக்கைகள் மற்றும் வால் பகுதி தற்போது மீட்கப்பட்டுள்ளன.1952-ஆம் ஆண்டு, அப்போது அமெரிக்காவின் தன்னாட்சி பிரதேசமாக இருந்த போர்ட்டோ ரிகோவின் சான் ஜூவானில் இருந்து நியூயார்க் நோக்கி பேன் ஆம் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 69 பேர் பயணம் செய்தனர். அட்லாண்டிக் பெருங்கடல் மேல் பறந்து கொண்டிருந்தபோது விமானத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
Advertisement
பின்னர், அதன் இரண்டு என்ஜின்களும் செயலிழந்ததால் விமானம் கடலில் விழுந்ததாக தெரியவந்தது.விமானம் கடல் நீரில் மூழ்கத் தொடங்கியபோது, அதிலிருந்த உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடன் 17 பேர் உயிர் தப்பி கடலில் மிதந்தனர். ஆனால், மீதமிருந்த 52 பேர் விமானத்துடன் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 13 பேரின் உடல்கள் மட்டுமே பின்னர் மீட்கப்பட்டன. உயிர் தப்பியவர்கள் கப்பல் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டாலும், கடலின் அதிக ஆழம் காரணமாக விமானத்தின் சிதிலங்களை அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை.தற்போது, அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2,000 அடி ஆழத்தில் விமானத்தின் இறக்கைகள், வால் பகுதி உள்ளிட்ட முக்கிய பாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் 74 ஆண்டுகளாக நீடித்து வந்த அந்த விமான விபத்து தொடர்பான தேடுதல் நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு