Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

71% உயர்வு... கோயம்பேட்டில் வெங்காயம் கிலோ ரூ.60; வெளிச்சந்தையில் ரூ.80

71% உயர்வு... கோயம்பேட்டில் வெங்காயம் கிலோ ரூ.60; வெளிச்சந்தையில் ரூ.80

சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த சந்தையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் முதல் ரக நாசிக் வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ரூ.54 முதல் ரூ.60 வரை விற்பனையானது. இதன் மூலம் ஆகஸ்டு மாத விலையுடன் ஒப்பிடும்போது வெங்காயத்தின் விலை 71.43 சதவீதம் உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் நாசிக் வெங்காயம் கிலோ ரூ.60 வரை விற்பனையாகும் நிலையில், வெளிச்சந்தையில் அதன் விலை ரூ.80 வரை சென்றுள்ளது. அன்றாட சமையலில் முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை உயர்வு பொதுமக்களின் செலவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. உற்பத்தி குறைந்ததே முக்கிய காரணம் வெங்காய விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து கோயம்பேடு வெங்காய மொத்த வியாபாரி ரகுநாத் கூறுகையில், கடந்த ஆண்டு வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்காததால் மராட்டிய மாநில விவசாயிகள் பலர் இந்த ஆண்டு சாகுபடி பரப்பை குறைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், எத்தனால் தயாரிப்புக்காக கரும்புக்கான தேவை அதிகரித்துள்ளதால், மராட்டியத்தில் சில விவசாயிகள் வெங்காயத்திற்கு பதிலாக கரும்பு சாகுபடிக்கு மாறியதும் உற்பத்தி குறைந்ததற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாக அவர் கூறினார். பொதுவாக நீண்ட காலம் சேமித்து வைக்கக்கூடிய நாசிக் வெங்காயம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. இந்த வெங்காயம் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் வரை விற்பனைக்கு பயன்படுத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு அதன் உற்பத்தி குறைந்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் விளையும் வெங்காயத்தை நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியாது. இதனால் போதிய விலை கிடைக்காத காலங்களில் அங்குள்ள விவசாயிகளும் சாகுபடியை குறைத்துள்ளனர். கோயம்பேட்டுக்கு குறைந்த வெங்காய வரத்து வழக்கமாக மராட்டியத்தில் இருந்து தினமும் சுமார் 30 டன் வெங்காயம் ஏற்றிய 35 லாரிகள் கோயம்பேடு சந்தைக்கு வரும். தற்போது அந்த எண்ணிக்கை 15 முதல் 18 லாரிகளாக குறைந்துள்ளது. இந்த பற்றாக்குறையை ஈடுகட்ட ஆந்திராவில் இருந்து தலா 15 டன் கொள்ளளவு கொண்ட 8 முதல் 10 லாரிகளும், கர்நாடகாவில் இருந்து 10 முதல் 12 லாரிகளும் தினசரி கோயம்பேட்டுக்கு வரவழைக்கப்படுகின்றன. இதற்கிடையே, தற்போதைய விலையை கவனித்து வரும் விவசாயிகள் கடந்த மாதமே புதிய வெங்காய சாகுபடியை தொடங்கியுள்ளனர். இவை சுமார் 90 நாட்களில் அறுவடைக்கு வரும் என்பதால், நவம்பர் அல்லது டிசம்பர் இறுதியில் வெங்காய வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகை வெங்காயங்களின் விலை கோயம்பேடு மொத்த சந்தையில் நேற்று நாசிக் வெங்காயம் கிலோ ரூ.60 வரை விற்பனையானது. ஆந்திரா வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரையும், கர்நாடக வெங்காயம் ரூ.35 முதல் ரூ.50 வரையும் விற்பனையானது. சாம்பார் வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது. சில்லறை விற்பனை கடைகளில் நாசிக் வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரையும், ஆந்திரா மற்றும் கர்நாடக வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.120 ஆக உள்ளது. முன்னதாக, வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனையானபோது, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. தற்போது ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை இல்லாத நிலையில், வெளிச்சந்தை விலை ரூ.80 வரை உயர்ந்துள்ளது. எனவே, விலை உயர்வை கட்டுப்படுத்த மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. பிற காய்கறிகளின் விலையும் உயர்வுவெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பொதுமக்கள் அசைவ உணவை தவிர்ப்பது, காய்கறி உற்பத்தி மற்றும் வரத்து குறைவது உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ காய்கறிகளின் விலை விவரம்:

Advertisement

* தக்காளி – ரூ.40 * உருளைக்கிழங்கு – ரூ.35 * கேரட் – ரூ.50 * பீன்ஸ் – ரூ.90 * பீட்ரூட் – ரூ.50 * சவ் சவ் – ரூ.30 * முள்ளங்கி – ரூ.30 * முட்டைக்கோஸ் – ரூ.25 * காலிபிளவர் – ரூ.25 * வெண்டைக்காய் – ரூ.30 * கத்திரிக்காய் – ரூ.30 * பாகற்காய் – ரூ.50 * புடலங்காய் – ரூ.25 * சுரைக்காய் – ரூ.25 * சேனைக்கிழங்கு – ரூ.40 * முருங்கைக்காய் – ரூ.40 * வெள்ளரிக்காய் – ரூ.40 * மிளகாய் – ரூ.30 * இஞ்சி – ரூ.170

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு