Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

6 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்திய முதலை... இன்று சிக்கியது!

6 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்திய முதலை... இன்று சிக்கியது!

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு அருகே கோதையாற்றில் கடந்த 6 ஆண்டுகளாக சுற்றித்திரிந்த முதலை, வனத்துறையினர் அமைத்திருந்த வலையில் இன்று சிக்கியது. கோதையாற்றில் நீண்ட காலமாக முதலை நடமாட்டம் இருந்து வந்ததால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர். இதையடுத்து முதலையை பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டதுடன், ஆற்றுப் பகுதியில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தினர்.

Advertisement
இந்நிலையில், ஒருநடைக்கல் ஆற்றுப்பாலம் அருகே வனத்துறையினர் விரித்திருந்த வலையில் முதலை சிக்கியது. உடனடியாக அங்கு சென்ற வனத்துறையினர், முதலையை பாதுகாப்பாக மீட்டனர். கடந்த 6 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு