கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு அருகே கோதையாற்றில் கடந்த 6 ஆண்டுகளாக சுற்றித்திரிந்த முதலை, வனத்துறையினர் அமைத்திருந்த வலையில் இன்று சிக்கியது. கோதையாற்றில் நீண்ட காலமாக முதலை நடமாட்டம் இருந்து வந்ததால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர். இதையடுத்து முதலையை பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டதுடன், ஆற்றுப் பகுதியில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தினர். இந்நிலையில், ஒருநடைக்கல் ஆற்றுப்பாலம் அருகே வனத்துறையினர் விரித்திருந்த வலையில் முதலை சிக்கியது. உடனடியாக அங்கு சென்ற வனத்துறையினர், முதலையை பாதுகாப்பாக மீட்டனர். கடந்த 6 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.