Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 08 செப்டம்பர் 2026 | 23 ஆவணி பராபவ வருடம்

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை ஐகோர்ட்டு மேலும் நீட்டித்துள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ம் தேதி தொடங்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதேபோல், கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த 5 பேரின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை சுட்டிக்காட்டி, தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

Advertisement
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில், தேர்தல் வழக்குகள் முடிவடையும் வரை இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணையமும் தனது தரப்பு பதில்மனுவில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ம் தேதி தொடங்கும் எனவும் சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு