4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியாருக்கு தூக்கு தண்டனை: நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.தேவர்குளம் அருகே மேல இலந்தைகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக பணியாற்றியவர் ஆபிரகாம் (47). கடந்த 2022-ம் ஆண்டு திருச்சபைக்கு வந்த 4 சிறுமிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்றும்,அவ்வாறுதெரிவித்தால்கொலைசெய்துவிடுவதாகவும்சிறுமிகளைஆபிரகாம்மிரட்டியதாககூறப்பட்டது.இதுதொடர்பான புகாரைத் தொடர்ந்து தேவர்குளம் போலீசார் விசாரணை நடத்தி ஆபிரகாமை கைது செய்தனர். அவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி வாதிட்டார். போலீசார் சமர்ப்பித்த ஆதாரங்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்களை பரிசீலித்த நீதிமன்றம், ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், 4 சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.மேலும், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்த ஆண்டில் மட்டும் நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இது 4-வது முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.