Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 29 அக்டோபர் 2026 | 12 ஐப்பசி பராபவ வருடம்

28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த அயர்லாந்து வீரர்

28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த அயர்லாந்து வீரர்

அயர்லாந்து அணியின் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் பென் வைட் (Ben White), தனது 28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டியில் அறிமுகமான பென் வைட், இதுவரை அயர்லாந்து அணிக்காக 3 டெஸ்ட், 2 ஒருநாள் மற்றும் 38 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன்மூலம் சர்வதேச அரங்கில் மொத்தம் 43 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், 41 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும், 2021, 2024 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் அயர்லாந்து அணியின் சார்பில் களமிறங்கியுள்ளார்.

Advertisement
குறிப்பாக, டி20 போட்டிகளில் தனது லெக் ஸ்பின் பந்துவீச்சாலும், பந்தின் வேகத்தை மாற்றி வீசும் திறமையாலும் கவனம் ஈர்த்தார். கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடியதே அவரது கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்தது. தனது ஓய்வு அறிவிப்பில், நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பளித்த அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம், பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்களுக்கு பென் வைட் நன்றி தெரிவித்துள்ளார். இனி மைதானத்திற்கு வெளியிலிருந்து அயர்லாந்து அணிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு