உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வருகிற 27-ந்தேதி தனுஷ்கோடியில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கடல்கள் சங்கமிக்கும் பகுதியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் முன்னிலையில், 1,000 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
Advertisement
இதையொட்டி, 27-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை தனுஷ்கோடி பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.