Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

24 மணி 24 நிமிடங்கள் இடைவிடாது பறந்த ஏர்பஸ் ஏ350; புதிய உலக சாதனை படைத்த குவாண்டஸ்

24 மணி 24 நிமிடங்கள் இடைவிடாது பறந்த ஏர்பஸ் ஏ350; புதிய உலக சாதனை படைத்த குவாண்டஸ்
மெல்போர்ன்: உலகின் மிக நீண்ட தூர வர்த்தக விமான சேவையை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் குவாண்டஸ் (Qantas) நிறுவனம், ஏர்பஸ் ஏ350 விமானத்தை தொடர்ந்து 24 மணி நிமிடங்கள் வானில் இயக்கி புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.இந்த சாதனைப் பயணத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஏர்பஸ் ஏ350-1000 யுஎல்ஆர் (Ultra Long Range) ரக விமானம், ஜூலை 27 அன்று மாலை 5.27 மணிக்கு மெல்போர்னில் இருந்து புறப்பட்டு, ஜூலை 28 மாலை பிரான்சின் டுலூஸ் நகரை சென்றடைந்தது.இந்தப் பயணத்தின் போது விமானம் பசிபிக் பெருங்கடல், அமெரிக்கா, கனடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக மொத்தம் 23,075 கிலோமீட்டர்தூரத்தை கடந்து, 24 மணி 24 நிமிடங்கள் தொடர்ந்து வானில் பறந்தது. இதன் மூலம் நீண்ட நேரம் இடைவிடாமல் பறந்த விமானமாக புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.இதற்கு முன்பு, 2005 ஆம் ஆண்டு ஹாங்காங்–லண்டன் சோதனைப் பயணத்தில் போயிங் 777-200எல்ஆர் விமானம் பதிவு செய்திருந்த 22 மணி 42 நிமிடங்கள் என்ற சாதனையை இந்தப் பயணம் முறியடித்துள்ளது.ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை நகரங்களிலிருந்து லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு 2027 முதல் நேரடி நீண்ட தூர விமான சேவையைத் தொடங்கும் நோக்கில் குவாண்டஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் **'புராஜெக்ட் சன்ரைஸ்'** திட்டத்தின் முக்கிய முன்னேற்றமாக இந்தச் சாதனைப் பயணம் கருதப்படுகிறது.இந்த ஏர்பஸ் ஏ350-1000 யுஎல்ஆர் விமானத்தில் மிக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் கூடுதலாக 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டி பொருத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு