Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

2027-க்குள் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பி.எம்.டபிள்யூ

2027-க்குள் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பி.எம்.டபிள்யூ

ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ (BMW), 2027ஆம் ஆண்டுக்குள் அந்நாட்டில் பணிபுரியும் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.முனிச் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சீன சந்தையில் அதிகரித்துள்ள போட்டி மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், மின்சார வாகனங்களின் உற்பத்திச் செலவு உயர்வு, சீன வாகன நிறுவனங்களின் கடுமையான போட்டி மற்றும் அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரிகள் ஆகியவை ஜெர்மனியின் வாகனத் துறைக்கு சவாலாக உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement
இதன் தாக்கத்தால் வோக்ஸ்வேகன் மற்றும் மெர்சிடீஸ்-பென்ஸ் உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்களும் ஏற்கனவே ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொழிலாளர் நலச்சங்கத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டு (R&D) பிரிவுகளில் மட்டுமே அமல்படுத்தப்படும் என்றும், உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் இருந்து விலக்கு பெறுவார்கள் என்றும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு