2026-27 தமிழக பட்ஜெட்: எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி? முழு பட்டியல்
தமிழக சட்டசபையில் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
துறைவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் பின்வருமாறு:
* பள்ளிக் கல்வித் துறை – ரூ.44,527 கோடி
* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – ரூ.39,609 கோடி
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை – ரூ.29,863 கோடி
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை – ரூ.23,357 கோடி
* நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை – ரூ.21,524 கோடி
* உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை – ரூ.17,290 கோடி
* சிறப்பு திட்ட செயலாக்கத் துறை – ரூ.17,150 கோடி
* எரிசக்தித் துறை – ரூ.15,828 கோடி
* வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை – ரூ.14,984 கோடி
* உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை – ரூ.14,830 கோடி
* போக்குவரத்துத் துறை – ரூ.13,561 கோடி
* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை – ரூ.11,532 கோடி
* சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – ரூ.9,818 கோடி
* வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை – ரூ.8,852 கோடி
* உயர்கல்வித் துறை – ரூ.8,393 கோடி
* கூட்டுறவுத் துறை – ரூ.8,028 கோடி
* கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை – ரூ.4,880 கோடி
* தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை – ரூ.4,414 கோடி
* சமூக நீதித் துறை – ரூ.3,937 கோடி
* நீதி நிர்வாகத் துறை – ரூ.2,486 கோடி
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை – ரூ.2,142 கோடி
* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை – ரூ.2,022 கோடி
* சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை – ரூ.1,762 கோடி
* கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை – ரூ.1,678 கோடி
* மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – ரூ.1,485 கோடி
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை – ரூ.1,051 கோடி
* சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை – ரூ.775 கோடி
* இந்து சமய அறநிலையத்துறை – ரூ.708 கோடி
* வணிக வரிகள் துறை – ரூ.651 கோடி
* முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை – ரூ.475 கோடி
* இயற்கை வளங்கள் துறை – ரூ.438 கோடி
* செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை – ரூ.398 கோடி.