Skip to main content
🌤️ —°C
சனி | 01 ஆகஸ்ட் 2026 | 16 ஆடி பராபவ வருடம்

200 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்த நிலையில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது ஏன்? – சீமான் கேள்வி

200 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்த நிலையில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது ஏன்? – சீமான் கேள்வி
தமிழ்நாட்டில் இந்த மாதத்திற்கான மின்கட்டணம் பல வீடுகளில் வழக்கத்தை விட அதிகமாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், அரசு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தபோதும், நடைமுறையில் பல வீடுகளுக்கு மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் மின் அளவீடு தாமதமாக மேற்கொள்ளப்பட்டதாலும், பழுதான மீட்டர்கள் குறித்து அளிக்கப்பட்ட புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாததாலும் இந்த நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் 200 யூனிட் இலவச மின்சாரத்தின் பயன் மக்களுக்கு கிடைக்காமல் போகும் வகையில் திட்டமிட்டு அளவீடு தாமதப்படுத்தப்பட்டதா என்ற சந்தேகமும் எழுவதாக அவர் கூறியுள்ளார்.தாமதமான மின் கணக்கீட்டின் காரணமாக மின் பயன்பாடு 500 யூனிட்டை கடந்ததாக கணக்கிடப்பட்டதால், இலவச மின்சார சலுகையை பெற முடியாததுடன், ஒரு யூனிட்டுக்கான கட்டணமும் அதிகரித்ததாக சீமான் தெரிவித்துள்ளார். தற்போதைய அதிகப்படியான மின்கட்டணத்திற்கு கணக்கீட்டு நடைமுறையிலும், தொழில்நுட்ப குறைபாடுகளிலும் உள்ள சிக்கல்களே முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறிய அரசு, ஆட்சிக்கு வந்த பின்னர் அதை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை 200 யூனிட் என்றும், 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவித்து மக்களை ஏமாற்றியதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
தற்போது மின்கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளும், அதிக மின்கட்டணத்திற்கு காரணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மின்னணு மீட்டர்கள் விரைவாக பொருத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் மக்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கேற்ப சரியான கட்டணத்தை செலுத்தும் நிலை உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், மின் கணக்கீட்டு குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான மின்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியின்படி மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசை சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு