Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி: சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம் தொடக்கம்

2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி: சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம் தொடக்கம்

சென்னையில் 2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணிகளை நீக்கும் மருந்துகள் செலுத்தும் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணியின் முதல் கட்டமாக திருவொற்றியூர், மணலி மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் முகாம் தொடங்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவதுடன், அக மற்றும் புற ஒட்டுண்ணிகளை அகற்றுவதற்கான மருந்துகளும் வழங்கப்படுகின்றன.இதற்கான பணிகளை மேற்கொள்ளும் வாகனத்தின் சேவையை, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு இணை ஆணையாளர் (சுகாதாரம்) ஸ்ரேயா பி.

Advertisement
சிங், வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் வி. சிவா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு