2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி: சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம் தொடக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
11 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி: சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம் தொடக்கம்

2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி: சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம் தொடக்கம்

சென்னையில் 2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணிகளை நீக்கும் மருந்துகள் செலுத்தும் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணியின் முதல் கட்டமாக திருவொற்றியூர், மணலி மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் முகாம் தொடங்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவதுடன், அக மற்றும் புற ஒட்டுண்ணிகளை அகற்றுவதற்கான மருந்துகளும் வழங்கப்படுகின்றன.இதற்கான பணிகளை மேற்கொள்ளும் வாகனத்தின் சேவையை, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு இணை ஆணையாளர் (சுகாதாரம்) ஸ்ரேயா பி. சிங், வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் வி. சிவா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.