Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 26 அக்டோபர் 2026 | 9 ஐப்பசி பராபவ வருடம்

2-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

2-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

ஜிம்பாப்வே பெண்கள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி, 20 ஓவர் தொடரைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா அதிரடி சதம்! இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அதிரடியாகச் சதமடித்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.

Advertisement
இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் குவித்தது. 207 ரன்களில் சுருண்ட ஜிம்பாப்வே 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே மகளிர் அணியால் இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்களைக் குவிக்க முடியவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 48.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜிம்பாப்வே அணியில் மோடஸ்டர் முப்பச்சிக்வா அதிகபட்சமாக 70 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இந்திய அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்த இந்தியா, இரண்டாவது ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு