Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 23 அக்டோபர் 2026 | 6 ஐப்பசி பராபவ வருடம்

2வது டி20 போட்டி: வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு ?

2வது டி20 போட்டி: வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு ?

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் நேற்று கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. இருப்பினும், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்க வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கோடாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இஷான் கிஷனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement
இதன் காரணமாகவே திலக் வர்மா வழக்கத்தைவிட முன்னதாக பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார். இரண்டாவது டி20 போட்டியில் இஷான் கிஷன் பங்கேற்பதும் சந்தேகமாக உள்ளது. இஷான் கிஷன் அடுத்த போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷி அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது என்று கோடாக் தெரிவித்துள்ளார். இதனால், இரண்டாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,060
🥈 Silver ₹225.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு