Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

2வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

2வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று அயர்லாந்தின் பிரிடி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. 47 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் இப்ராகிம் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் குவித்தார்.அயர்லாந்து அணியின் சார்பில் மார்க் அதிர் மற்றும் ஜெய் முந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதனைத் தொடர்ந்து 300 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
Advertisement
33.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு