Skip to main content
🌤️ —°C
சனி | 01 ஆகஸ்ட் 2026 | 16 ஆடி பராபவ வருடம்

129 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை வலியுறுத்தல்

129 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவுக்குள் செயல்பட்டு வரும் 129 டாஸ்மாக் மதுபானக் கடைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றை தமிழக அரசு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகிய பிறகு வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பின் சார்பில் ஜூலை மாதம் முழுவதும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அவரது வழிகாட்டுதலின் பேரில் அமைப்பினர் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தினர்.போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில், ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் தனது முதல் மாநாட்டையும் அண்ணாமலை நடத்தியிருந்தார்.
Advertisement
இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விதிமுறைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகக் கூறப்படும் 129 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இதனுடன் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த அவர்,வீதிலீடர்ஸ்பவுண்டேஷன்மேற்கொண்டகளஆய்வின்முடிவுகள்அரசின்கவனத்திற்குகொண்டுசெல்லப்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளார்.மேலும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் 129 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், மாணவர்கள் கல்வி கற்கும் இடங்கள், மக்கள் வழிபடும் தலங்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்யும் பகுதிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அந்தக் கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு