Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 14 செப்டம்பர் 2026 | 29 ஆவணி பராபவ வருடம்

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-ரிலீஸாகும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-ரிலீஸாகும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கிய 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' திரைப்படம் 2015-ஆம் ஆண்டு வெளியாகி, நகைச்சுவை மற்றும் திகில் அம்சங்கள் கலந்த கதையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் சிம்ரன், வி.டி.வி. கணேஷ், ஆர்யா, பிரியா ஆனந்த், யூகி சேது உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றிருந்தனர்.இரட்டை அர்த்த வசனங்களை மையமாகக் கொண்டு இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த படம், வெளியான காலத்தில் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisement
குறிப்பாக இளம் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைத்தது.இந்த நிலையில், 11 ஆண்டுகள் கடந்த பிறகு 'த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் ரீ-ரிலீஸ் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு