Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - தி.மு.க. எம்.பி. கனிமொழி காட்டம்

10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - தி.மு.க. எம்.பி. கனிமொழி காட்டம்

வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திலேயே 10ம் வகுப்பு மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, மூச்சடைக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், முதல்-அமைச்சர் விஜய் மதுராந்தகம் வருவதையொட்டி, சம்பவத்தை பொய்யான தகவல் எனக் கூறி மறைக்க காவல்துறை முயற்சிப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதைவிட முதல்-அமைச்சரின் வருகைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதையே காவல்துறை முக்கியமாகக் கருதுகிறதா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். “இது உண்மையில் யாருக்கான ஆட்சி? அந்தச் சிறுமிக்கு எப்படி நீதி கிடைக்கும்?” என்றும் அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு