Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

100 கோடி பேரை அழிக்கும் ஆயுதமாக ஏஐ மாறலாம்... பில் கேட்ஸ் எச்சரிக்கை

100 கோடி பேரை அழிக்கும் ஆயுதமாக ஏஐ மாறலாம்... பில் கேட்ஸ் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு துறைக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் 100 கோடி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. மனிதர்கள் செய்யும் பல்வேறு பணிகளை குறுகிய நேரத்தில் முடிப்பதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்தத் தொழில்நுட்பம், பல துறைகளில் வேலைவாய்ப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், எதிர்காலத்தில் ஏஐ மனிதர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்ற அச்சமும் நிபுணர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Advertisement
இந்தச் சூழலில், ஏஐயால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பில் கேட்ஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: “ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேறி வருகிறது. இதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைத்தாலும், ஆபத்துகளும் உள்ளன. ஏஐ தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால், 100 கோடி மக்களை கொல்லும் அளவுக்கு பேரழிவு ஏற்படுத்தும் சக்தியாக அது மாறக்கூடும். ஏஐ மிகவும் சக்திவாய்ந்த ஆபத்தான ஆயுதமாக மாறியுள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு ஏஐ நிறுவனங்களின் சுய கட்டுப்பாடுகள் மட்டும் போதாது. ஒவ்வொரு நாட்டின் அரசும் தலையிட்டு கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்” என்றார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு