Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

உலகம் முழுவதும் முடங்கிய ‘மைக்ரோசாப்ட்’ சேவைகள் – பயனர்கள் கடும் அவதி

உலகம் முழுவதும் முடங்கிய ‘மைக்ரோசாப்ட்’ சேவைகள் – பயனர்கள் கடும் அவதி

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், உலகம் முழுவதும் பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் விண்டோஸ் (Windows), அவுட்லுக் 365 (Outlook 365), டீம்ஸ் (Teams), எக்ஸ்பாக்ஸ் (Xbox), கோபைலட் (Copilot) உள்ளிட்ட சேவைகளை ஏராளமான நிறுவனங்களும் தனிநபர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ் உள்ளிட்ட முக்கிய சேவைகள் திடீரென செயலிழந்ததால் உலகம் முழுவதும் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொழில்நுட்பக் கோளாறின் தாக்கம் OpenAI மற்றும் Anthropic நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு சேவைகளிலும் எதிரொலித்துள்ளது. அதிகப்படியான பயன்பாடு மற்றும் பணிச்சுமை காரணமாக சில சர்வர்கள் எதிர்பாராத விதமாக செயல்படாமல் போனதே இந்தப் பாதிப்புக்குக் காரணம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மைக்ரோசாப்ட் சேவைகளைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக பயனர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. அவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல சர்வர்கள் தொடர்ந்து சீராக இயங்கி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சர்வர்களை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சேவை பாதிப்பைக் குறைக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் இணையப் போக்குவரத்தை மாற்று வழிகளில் திருப்பிவிடுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் விளக்கமளித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு