ஹீரோவாக அறிமுகம் ஆகும் முத்துக்குமார்... ஜனவரியில் படம் ரிலீஸ்
கூத்து பட்டறையில் இருந்து வந்தவர் முத்துக்குமார். 'வேட்டை' படத்தில் வில்லனாக அறிமுகமான அவர், தொடர்ந்து 'வேட்டையாடு', 'சார்பட்டா பரம்பரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த 'தாயக்கழவி' படத்தின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அவர் கதையின் நாயகனாக புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். அவருடன் இன்னொரு நாயகனாக புகழ் நடித்திருக்கிறார். யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்றாயன், ராமர், சரத், அஜய் ராஜ், பகவேல் நவநீதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் மதன் துரை இயக்குநராக அறிமுகமாகிறார். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம்.எஸ். ஜோன்ஸ் இசையமைத்துள்ளார். 'டார்க்' ஜானரில் உருவாகும் இப்படம் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.