Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

ஸ்குவாஷில் வெண்கலம் வென்ற தமிழக இணையர் ஜோஸ்னா - செந்தில்குமாருக்கு அன்புமணி வாழ்த்து

ஸ்குவாஷில் வெண்கலம் வென்ற தமிழக இணையர் ஜோஸ்னா - செந்தில்குமாருக்கு அன்புமணி வாழ்த்து

ஜப்பானின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் இணை மூன்றாவது இடம் பிடித்து இந்தப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்நிலையில், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஆசிய விளையாட்டுப் போட்டியின் கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் இணை வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும், இந்த இணை தங்கப் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஹாங்காங் இணையரிடம் கடுமையாகப் போராடி தோல்வியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். போட்டி விதிகளின்படி அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடைபெறும் போட்டிகளிலும் இருவரும் சிறப்பாக விளையாடி மேலும் பதக்கங்களை வெல்ல வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு