ஸ்குவாஷில் வெண்கலம் வென்ற தமிழக இணையர் ஜோஸ்னா - செந்தில்குமாருக்கு அன்புமணி வாழ்த்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஸ்குவாஷில் வெண்கலம் வென்ற தமிழக இணையர் ஜோஸ்னா - செந்தில்குமாருக்கு அன்புமணி வாழ்த்து

ஸ்குவாஷில் வெண்கலம் வென்ற தமிழக இணையர் ஜோஸ்னா - செந்தில்குமாருக்கு அன்புமணி வாழ்த்து

ஜப்பானின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் இணை மூன்றாவது இடம் பிடித்து இந்தப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்நிலையில், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஆசிய விளையாட்டுப் போட்டியின் கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் இணை வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த இணை தங்கப் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஹாங்காங் இணையரிடம் கடுமையாகப் போராடி தோல்வியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். போட்டி விதிகளின்படி அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடைபெறும் போட்டிகளிலும் இருவரும் சிறப்பாக விளையாடி மேலும் பதக்கங்களை வெல்ல வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.