‘மேக் இன் இந்தியா’, ‘ஆத்மநிர்பார் பாரத்’ உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களின் மூலம் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.உலகளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலையும் கடந்து இந்திய பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், முதல் காலாண்டில் 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் வெளிப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், பிரதமர் மோடி இன்று இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிட்ட வீடியோவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
Advertisement
அப்போது மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த அவர், அரசின் கொள்கைகள் சிறப்பாகவும், அதன் நோக்கங்கள் தெளிவாகவும் இருப்பதால் நாடு வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டி வருவதாக கூறினார்.மேலும், மக்கள் தொடர்ந்து உள்நாட்டு பொருட்களையும், சுயசார்பையும் ஆதரித்தால், இந்தியா சுதந்திரம் பெற்ற 100-வது ஆண்டில் நாட்டின் இளைஞர்களுக்கு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி வழங்க முடியும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.இதன் ஒரு பகுதியாக, விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதேபோல், தேவையில்லாமல் தங்கம் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.