Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

வெற்றிப்பயணம் திட்டம் தொடக்கம்: பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கினார் முதல்-அமைச்சர் விஜய்

வெற்றிப்பயணம் திட்டம் தொடக்கம்: பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கினார் முதல்-அமைச்சர் விஜய்

தமிழகம் முழுவதும் பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் கடந்த தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சட்டசபை தேர்தலின்போது த.வெ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் அனைத்து அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்-அமைச்சர் விஜய், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம் ‘வெற்றிப்பயணம்’ என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தில் பயன்பெற பெண்களுக்கு வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதேபோல், பயணங்களின் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு கிடையாது. மேலும், இத்திட்டம் பிற சேவைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றிப்பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்த அவர், அங்கிருந்த பெண் பயணிகளுக்கு இலவச பயண டிக்கெட்டுகளை வழங்கினார்.

Advertisement
ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று பெண்களிடம் நேரடியாக டிக்கெட்டுகளை அளித்தார். அப்போது பெண் பயணிகள் முதல்-அமைச்சர் விஜய்க்கு சாக்லெட் வழங்கியும், கைகளால் சுத்தி போட்டும் தங்களது நன்றியை தெரிவித்தனர். அதற்கு விஜய்யும் அதே முறையில் பதிலளித்தார். மேலும், பெண் பயணிகளுடன் அமர்ந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார். திருநங்கைகளும் இத்திட்டத்தின் கீழ் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என அரசு கணித்துள்ளது. தற்போது 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர்ப்புற சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தின் மூலம் இந்த வசதி மேலும் பல அரசு பேருந்துகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. அதன்படி, மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரண அரசு பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு அதிகமான தொலைவில் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரண பேருந்துகளும் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. 7 அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் மொத்தம் 18,413 பேருந்துகளில் 12,695 பேருந்துகள் ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தில் இடம்பெறுகின்றன. இதேபோல், மொத்த நடைகளில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 500 நடைகள் இத்திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் தினமும் சுமார் 84.32 லட்சம் பெண்கள்பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு