Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 05 நவம்பர் 2026 | 19 ஐப்பசி பராபவ வருடம்

விராட் கோலியின் பேட்டிங் திறமையை புகழ்ந்த நியூசிலாந்து வீரர்

விராட் கோலியின் பேட்டிங் திறமையை புகழ்ந்த நியூசிலாந்து வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பேட்டிங் திறமையை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டபி வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வலுசேர்த்தார். அவர் 51 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இதில் 13 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். போட்டி முடிந்த பிறகு கோலியின் ஆட்டம் குறித்து பேசிய ஜேக்கப் டபி, பந்தின் பவுன்ஸை எதிர்கொள்வதில் கோலிக்கு எந்தவித சிரமமும் இல்லை என்று தெரிவித்தார். குறிப்பாக, ஹூக் மற்றும் புல் ஷாட்களை அவர் மிகச் சிறப்பாக ஆடுவதாகவும், பந்தை நேராக மைதானத்தின் வழியாக வலிமையாக அடிக்கும் திறமையும் அவரிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், கோலி பல ஆண்டுகளாக இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகக் கூறிய டபி, பெங்களூருவில் நடைபெற்ற வலைப்பயிற்சியின்போதும் தனக்கு எதிராக கோலி பலமுறை அதிரடியாக விளையாடியதை நினைவுகூர்ந்தார்.

Advertisement
கோலியின் பேட்டிங்கில் குறைகளைக் கண்டறிவது மிகவும் கடினம் என்றும் டபி தெரிவித்தார். பந்துவீச்சாளர்களின் வேகத்தைத் தனக்குச் சாதகமாக மாற்றி ரன்களைக் குவிக்கும் திறமை கோலியிடம் இருப்பதாகக் கூறிய அவர், பந்தை உயரமாகவும் நேராகவும் அடிக்கும் அவரது திறன் எதிரணிக்கு பெரும் சவாலாக அமைகிறது என்றும் பாராட்டினார். முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மழையால் மாற்றியமைக்கப்பட்ட டக்வொர்த் லூயிஸ் முறையிலான 143 ரன்கள் இலக்கை இந்திய அணி 22.4 ஓவர்களில் எட்டியது. இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,385
🥈 Silver ₹210.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு