பார்சிலோனா அணியின் இளம் நட்சத்திர வீரரான லாமின் யமால், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 20 வயதுக்கு முன்பாக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் பார்சிலோனா அணி தனது சொந்த மைதானத்தில் ஆஸ்டன் வில்லா அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்திலேயே லாமின் யமால் கோல் அடித்து பார்சிலோனா அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். தொடர்ந்து இரண்டாவது பாதியில் 52 மற்றும் 64-வது நிமிடங்களில் ராபின்ஹா அடுத்தடுத்து கோல்கள் அடித்தார். இதன் மூலம் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
Advertisement
இந்தப் போட்டியில் ஆஸ்டன் வில்லாவுக்கு எதிராக அடித்த கோலுடன், சாம்பியன்ஸ் லீக் தொடரில் யமாலின் மொத்த கோல் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இதன் மூலம் 20 வயதை எட்டுவதற்கு முன்பே இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே, 20 வயதுக்கு முன்பாக சாம்பியன்ஸ் லீக்கில் 13 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது 37 போட்டிகளில் விளையாடி 14 கோல்கள் அடித்துள்ள லாமின் யமால், எம்பாப்பேவின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.