Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

விண்வெளியில் இருந்து ஐபோனில் பதிவான பசிபிக் பெருங்கடல் காட்சி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

விண்வெளியில் இருந்து ஐபோனில் பதிவான பசிபிக் பெருங்கடல் காட்சி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, தொழில்முறை டிஜிட்டல் கேமரா பயன்படுத்தாமல், சாதாரண ஐபோன் மூலம் எடுக்கப்பட்ட பசிபிக் பெருங்கடலின் அசத்தலான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.நாசாவின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் அனில் மேனன், விண்வெளி நிலையத்தின் கப்போலா கண்காணிப்பு பகுதியிலிருந்து இந்த புகைப்படத்தை தனது ஐபோனில் பதிவு செய்தார். அந்தப் படத்தை அவர் ஞாயிற்றுக்கிழமை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.பசிபிக் பெருங்கடலின் மீது உருவாகியுள்ள சக்திவாய்ந்த 'டால்பின்' புயலின் தோற்றமும், அதைச் சுற்றியுள்ள மேகங்களின் சுழல் அமைப்பும் அந்தப் புகைப்படத்தில் தெளிவாகக் காட்சியளிக்கின்றன.
Advertisement
ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்டிருந்தாலும், அதன் தரம் தொழில்முறை டிஜிட்டல் கேமராவில் பதிவான படங்களுக்கு இணையாக இருப்பதாக விண்வெளி ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.சமீப காலமாக, விண்வெளி வீரர்கள் தங்களது தனிப்பட்ட மொபைல் போன்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும், நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் உள்ளிட்ட பயணங்களுக்கும் எடுத்துச் செல்ல நாசா அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் விண்வெளியில் இருந்து பூமியின் அழகிய காட்சிகளை எளிதாகப் பதிவு செய்து, உடனடியாக உலகுடன் பகிரும் வசதி கிடைத்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு