Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 25 ஆகஸ்ட் 2026 | 9 ஆவணி பராபவ வருடம்

விஜயகாந்த் பிறந்தநாள்: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மரியாதை

விஜயகாந்த் பிறந்தநாள்: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மரியாதை
மறைந்த நடிகரும், தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான விஜயகாந்தின் 74வது பிறந்தநாளையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் காலமானார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சி எஸ். முருகன், கருணாஸ், செயற்குழு மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள், நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய விஜயகாந்த், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றார். திரைத்துறையில் வளர்ந்து வந்த நடிகர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை ஊக்குவித்ததுடன், பசியுடன் நாடி வந்தவர்களுக்கு உணவு வழங்கி உதவியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
Advertisement
அவரது மனிதநேய குணங்களை நினைவுகூர்ந்து திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் பதவி வகித்த காலம், சங்கத்தின் முக்கியமான காலகட்டமாகக் கருதப்படுகிறது. அப்போது நடிகர் சங்கம் கடுமையான நிதி நெருக்கடியிலும் கடனிலும் சிக்கியிருந்த நிலையில், கலை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டி அந்தக் கடன் சுமையை முழுமையாகச் சமாளிக்க அவர் நடவடிக்கை எடுத்தார். திரைக்கலைஞர்களின் நலனுக்காகவும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நடிகர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் அவர் மேற்கொண்ட பணிகள் இன்றளவும் திரையுலகினரால் நன்றியுடன் நினைவுகூரப்படுகின்றன.விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு நடிகர் சங்கத் தலைவர்நாசர்,பொருளாளர்கார்த்திமற்றும்சங்கநிர்வாகிகள்மலரஞ்சலிசெலுத்தினர்.திரையுலகைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஏராளமான ரசிகர்களும் விஜயகாந்தை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களிலும் நேரிலும் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு