Skip to main content
🌤️ —°C
ஞாயிறு | 23 ஆகஸ்ட் 2026 | 7 ஆவணி பராபவ வருடம்

வார விடுமுறையால் குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையால் குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையை முன்னிட்டு குற்றாலத்தில் உள்ள அருவிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து, நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.தென்காசி மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது.குற்றாலத்தின் முக்கிய அருவிகளிலும் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது சீரான நீர்வரத்து காணப்படுகிறது.இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் திரண்டனர். குறிப்பாக ஐந்தருவி, மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவிகளில் குளித்து உற்சாகமடைந்தனர்.இதற்கிடையே, தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தென்காசியைச் சேர்ந்த தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தற்போது பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது.
Advertisement
நெல்லையில் தினசரி 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வரும் சூழலில், மீண்டும் மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக ராஜா வெளியிட்டுள்ள பதிவில், கேரளா மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார். நாளை (திங்கட்கிழமை) தொடங்கும் மழை 26-ந்தேதி வரை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், 25-ந்தேதி குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதன்பின்னர் அருவி சீசன் மேலும் களைகட்டும் என்றும் ராஜா தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு