Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

வரத்து அதிகரிப்பால் கடலூரில் தக்காளி விலை திடீர் சரிவு

வரத்து அதிகரிப்பால் கடலூரில் தக்காளி விலை திடீர் சரிவு

கடலூர் சந்தைக்கு தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், அதன் விலை கடந்த ஒரு வாரத்தில் கிலோவுக்கு ரூ.30 வரை குறைந்துள்ளது. இதனால் தக்காளி வாங்கும் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமையலில் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாகத் தக்காளி விளங்குகிறது. பல்வேறு குழம்பு வகைகள் மற்றும் அசைவ உணவுகள் தயாரிப்பதில் தக்காளி முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், தக்காளி விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கடலூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சந்தைக்கு வரும் தக்காளியின் அளவு குறைந்தது. இதனால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்தது.

Advertisement
கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.55-க்கும், சில்லறைக் கடைகளில் ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் இந்த விலை உயர்வு பொதுமக்களுக்குச் சுமையை ஏற்படுத்தியது. தற்போது கடலூர் சந்தைக்கு தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், விலை சரியத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரே வாரத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.30 வரை குறைந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தக்காளி விலை குறைந்திருப்பது குடும்பச் செலவுகளைச் சமாளிக்கும் இல்லத்தரசிகளுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு