Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 14 அக்டோபர் 2026 | 28 புரட்டாசி பராபவ வருடம்

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு: இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு: இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை

சென்னை:தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்குவதற்குச் சாதகமான வானிலை நிலவுகிறது. இதற்கிடையே, இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை நாட்டின் எஞ்சிய பகுதிகளிலிருந்தும் முழுமையாக விலகுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில், தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது. மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 4.5 கி.மீ. உயரத்திலும், குமரிக்கடல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1.5 கி.மீ. உயரம் வரையிலும் வளிமண்டலச் சுழற்சிகள் நிலவுகின்றன. மேலும், குமரிக்கடல் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒடிசா கடலோரத்தை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காணப்படுகிறது. இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு அக்டோபர் 14: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 6 நாட்களுக்கான மழை முன்னறிவிப்பு அக்டோபர் 15: விருதுநகர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 16: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement
தமிழகத்தின் பிற பகுதிகளில் பல இடங்களில் மிதமான மழை பெய்யலாம். அக்டோபர் 17:நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 18:நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் புதுச்சேரியிலும் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 19: நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 20: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் மழை பெய்யக்கூடிய இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது அக்டோபர் 14 முதல் 18-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் உள் தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். மற்ற பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும். அக்டோபர் 16 முதல் 18-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவில் காணப்படும். சென்னையின் வானிலை நிலவரம்இன்றும் நாளையும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும். கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை இல்லை தமிழகக் கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு தற்போதைக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,590
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு