Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 23 அக்டோபர் 2026 | 6 ஐப்பசி பராபவ வருடம்

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 26-ம் தேதி உருவாகிறது அர்னாப் புயல்?

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 26-ம் தேதி உருவாகிறது அர்னாப் புயல்?

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், வரும் அக்டோபர் 26-ம் தேதிக்குள் அது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த 15-ம் தேதி முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வரும் நாட்களிலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது குமரிக்கடல், அதனை ஒட்டிய தென்தமிழகப் பகுதிகள் மற்றும் கேரளப் பகுதிகளில் நிலவுகிறது. இந்தச் சூழலில், வங்கக்கடலில் வெள்ளிக்கிழமையான இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்டோபர் 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 25-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். தொடர்ந்து, 26-ம் தேதிக்குள் புயலாக மாற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் உருவானால், வங்கதேசம் பரிந்துரைத்த ‘அர்னாப்’ என்ற பெயர் சூட்டப்படும். ‘அர்னாப்’ என்ற சொல்லுக்கு ‘கடல்’ என்பது பொருள்.

இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் அக்டோபர் 26-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.

Advertisement

நாளையும் மழை தொடரும் சனிக்கிழமையான நாளை, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,060
🥈 Silver ₹225.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு