Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வியாழன் | 10 செப்டம்பர் 2026 | 25 ஆவணி பராபவ வருடம்

ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு

ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு ரூ.6,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு மொத்தம் ரூ.6,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளது. இதில், 7.49 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2036-ன் ரூ.2,000 கோடி மறுவெளியீடும், 7.62 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2041-ன் ரூ.2,000 கோடி மறுவெளியீடும், 7.70 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2051-ன் ரூ.2,000 கோடி மறுவெளியீடும் அடங்கும்.

Advertisement
இந்த ஏலம் செப்டம்பர் 15, 2026 அன்று மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் நடைபெறுகிறது. போட்டி ஏலக் கேட்புகளை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், போட்டியற்ற ஏலக் கேட்புகளை காலை 10.30 மணி முதல் 11 மணி வரையிலும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையான இ-குபேர் (E-Kuber) தளத்தில் மின்னணு வடிவில் செப்டம்பர் 15-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு