ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

10 Sep 2026 www.thinathulir.com

ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு

ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு ரூ.6,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு மொத்தம் ரூ.6,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளது. இதில், 7.49 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2036-ன் ரூ.2,000 கோடி மறுவெளியீடும், 7.62 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2041-ன் ரூ.2,000 கோடி மறுவெளியீடும், 7.70 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2051-ன் ரூ.2,000 கோடி மறுவெளியீடும் அடங்கும். இந்த ஏலம் செப்டம்பர் 15, 2026 அன்று மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் நடைபெறுகிறது. போட்டி ஏலக் கேட்புகளை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், போட்டியற்ற ஏலக் கேட்புகளை காலை 10.30 மணி முதல் 11 மணி வரையிலும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையான இ-குபேர் (E-Kuber) தளத்தில் மின்னணு வடிவில் செப்டம்பர் 15-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.