Skip to main content
🌤️ —°C
வியாழன் | 20 ஆகஸ்ட் 2026 | 4 ஆவணி பராபவ வருடம்

ரேஷன் அரிசியை ஆடு, கோழிக்குத்தான் பயன்படுத்துகின்றனர்: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் சர்ச்சை

ரேஷன் அரிசியை ஆடு, கோழிக்குத்தான் பயன்படுத்துகின்றனர்: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் சர்ச்சை
தமிழக சட்டசபையில் ரேஷன் அரிசி தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை மக்கள் ஆடு, கோழிகளுக்கே பயன்படுத்துவதாக அவர் கூறியதற்கு தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் ஆரம்பித்ததும் நேரமில்லா நேரம் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கேள்வி நேரம் நடைபெறவில்லை.சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் பேசினர்.தொடர்ந்து, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார்.அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கள் ஆட்சிக் காலத்தில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக கிடங்குகளில் வைக்கப்பட்டதாக தெரிவித்தார். நெல் மழையில் நனைந்து பாதிக்கப்படாமலும், முளைக்காமலும் பாதுகாத்து, தரமான வெள்ளை அரிசி கிடைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பொதுமக்கள் ஆடு மற்றும் கோழிகளுக்கே பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
Advertisement
அமைச்சரின் இந்த கருத்துக்கு தி.மு.க. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.இதையடுத்து விளக்கம் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சியினர் கூறியதன் அடிப்படையிலேயே தான் அவ்வாறு தெரிவித்ததாக கூறினார். தமிழகத்தில் சன்ன ரக நெல் உற்பத்தி குறைவாக இருப்பதாகவும், அதனால் அண்டை மாநிலங்களில் இருந்து அந்த வகை நெல்லை கொள்முதல் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.தமிழகத்தில் சன்ன ரக நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், அதற்கான கூலியை முதல்-அமைச்சர் உயர்த்தி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த வகை நெல் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை சிலர் பயன்படுத்துவதில்லை என்பதே தனது கருத்து என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு