ரெயில் மீது உரசிய மின்கம்பி; அச்சத்தில் ரெயிலிலிருந்து இறங்கி ஓடிய பயணிகள்
மேற்கு வங்காளத்தில் பயணிகள் ரெயிலின் மீது மேல்மின் கம்பி உரசியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரெயிலில் பயணம் செய்தவர்கள் திடீரென அச்சமடைந்து, பாதுகாப்பு கருதி ரெயிலிலிருந்து இறங்கி ஓடினர்.தகவலறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மேல்மின் கம்பியில் ஏற்பட்ட கோளாறு ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது பெரிய அளவிலான காயம் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் குறித்து ரெயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.சம்பவம் காரணமாக அந்த வழித்தடத்தில் சில ரெயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் நிலைமை சீரமைக்கப்பட்டதும் போக்குவரத்து வழக்கம்போல் மீண்டும் தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.