Skip to main content
🌤️ —°C
சனி | 15 ஆகஸ்ட் 2026 | 30 ஆடி பராபவ வருடம்

ரியோ ராஜ் நடித்த ‘ராம் இன் லீலா’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்

ரியோ ராஜ் நடித்த ‘ராம் இன் லீலா’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்
நடிகர் ரியோ ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ராம் இன் லீலா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், தனது எளிமையான மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘ஜோ’, ‘ஸ்வீட் ஹார்ட்’, ‘ஆண்பாவம் பொல்லாதது’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.அவரது புதிய படமான ‘ராம் இன் லீலா’வை அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார்.
Advertisement
இதில் வர்திகா நாயகியாக நடித்துள்ள நிலையில், காதலை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது டப்பிங், ரீ-ரெக்கார்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பின்னணிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. அதன்படி, ‘ராம் இன் லீலா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. காதலும் பொழுதுபோக்கும் இணைந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு