'ராம் IN லீலா' ரிலீஸ் தேதி அறிவிப்பு... ஆகஸ்ட் 21 முதல் திரையரங்குகளில் ரியோ ராஜ்
நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராம் IN லீலா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் வெளியீட்டை உறுதிப்படுத்தும் வகையில், ரியோ ராஜ் தனது எக்ஸ் (X) தளத்தில், "தீவிரமான கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள். 'ராம் IN லீலா' திரையரங்குகளில் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக 'ஆண் பாவம் பொல்லாதது' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரியோ ராஜ் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஒய்வா எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், வர்திகா ஜெயின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ராமசந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளராக அன்கிட் மேனன் பணியாற்றியுள்ளார்.