Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 16 செப்டம்பர் 2026 | 31 ஆவணி பராபவ வருடம்

ராமசாமி படையாட்சியாரின் மக்கள் நலப்பணிகளை போற்றிடுவோம்: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்

ராமசாமி படையாட்சியாரின் மக்கள் நலப்பணிகளை போற்றிடுவோம்: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில், ராமசாமி படையாட்சியாரின் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார். அந்தப் பதிவில், சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில், அவரது சிறப்பான மக்கள் சேவையை நினைவுகூர்ந்து வணங்குவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும், மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அவர், கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் சம உரிமை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து மேற்கொண்ட பணிகளும், முன்னெடுத்த நடவடிக்கைகளும் தமிழக அரசியல் களத்தில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவரது பிறந்தநாளில், ராமசாமி படையாட்சியாரின் மக்கள் நலப்பணிகளைப் போற்றுவோம் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு